முதலீடு வகை | பாதுகாப்பு (Safety) | வருமானம் (Returns) | எவ்வளவு விரைவில் பணம் எடுக்கலாம் (Ease of converting to cash) | குறைந்த பட்ச முதலீடு (ரூபாய்) |
---|---|---|---|---|
வங்கி சேமிப்பு | முழு பாதுகாப்பு | 3 % | உடனடியாக | 100 அல்லது 1,000 (வங்கியைப் பொறுத்தது) |
வங்கி வைப்பு நிதி | முழு பாதுகாப்பு | 8% (மாறலாம். ஆனால் இழப்பு இருக்காது) | ஒரு நாளில் | 1,000 அல்லது 5,000 (வங்கியைப் பொறுத்தது) |
தங்கம்/வெள்ளி | கொஞ்சம் பாதுகாப்பு குறைவு | 10 % (மாறலாம். கொஞ்சம் இழப்பு இருக்கலாம்) | ஒரு சில நாட்கள் | 1,000 (நகையாக வாங்கினால்). 5,000 (தங்கக் காசாக வாங்கினால்). 1,200 (பரஸ்பர நிதியாக வாங்கினால்) |
வீடு , நிலம் | பாதுகாப்பு குறைவு | 15% (மாறலாம். ஓரளவு இழப்பு இருக்கலாம்) | சில மாதங்கள் | சில லட்சங்கள் |
பங்கு சந்தை ; பங்கு (Share) | பாதுகாப்பு மிகக் குறைவு. இதை வாங்கக் கூடாது என்பது என் கருத்து | -90 லிருந்து + 200 % வரை (மாறலாம், முழு முதலுக்கே மோசம் வரலாம்)* | ஒரு சில நாட்கள் ** | 5,000 அல்லது 10,000(உங்கள் புரோக்கரைப் பொறுத்தது) |
பங்கு சந்தை: பங்கு பரஸ்பர நிதி (Diversified Equity Fund) | பாதுகாப்பு குறைவு | 20% (மாறலாம். முதலில் 30% வரை இழக்க வாய்ப்பு உண்டு) | ஒரு சில நாட்கள் ** | 500 முதல் 5,000 வரை இருக்கலாம் |
பங்கு சந்தை: வைப்பு நிதி-பரஸ்பர நிதி(Debt Fund) | ஏறக்குறைய முழு பாதுகாப்பு | 7லிருந்து 8% (மாறலாம். ஆனால் இழப்பு இருக்காது) | 3 அல்லது 4 நாட்கள் | 1,000 முதல் 5,000 வரை இருக்கலாம் |
பங்கு சந்தை: நடுநிலை பரஸ்பர நிதி (Balanced Fund) | நடுத்தர பாதுகாப்பு (பங்கு பரஸ்பர நிதிக்கும் வைப்பு நிதி-பரஸ்பர நிதிக்கும் இடையே) | 15% (மாறலாம், கொஞ்சம் இழப்பு இருக்கலாம்) | சில நாட்கள்** | 1,000 முதல் 5,000 வரை இருக்கலாம் |
பங்கு சந்தை: துறைசார் பரஸ்பர நிதி (Sector Fund) | பாதுகாப்பு குறைவு. இதையும் நாம் வாங்கக் கூடாது எனக் கருதுகிறேன் | -50 முதல் +100% வரை* | சில நாட்கள்** | 1,000 முதல் 5,000 வரை இருக்கலாம் |
* இங்கு -90% முதல் 200% வரை என்று எளிமைப் படுத்தி சொல்லி இருக்கிறேன். இதன் பொருள் பல மடங்கு லாபமும் வரலாம், எல்லாமே இழக்கவும் நேரிடலாம் என்பதே. அடுத்து -50% முதல் 100% வரை என்று சொன்னால், சில மடங்கு லாபம் வரலாம், நிறைய இழக்கலாம் என்று பொருள்.
** சில நாட்கள் என்று சொன்னாலும், “தேவைப்பட்டால், விலை சாதகமாக இருந்தால் 3 அல்லது 4 நாட்களில் விற்று பணம் ஆக்கலாம். ஆனால், விலை சாதகமாக இல்லை என்றால் நாம் பல மாதங்கள் அல்லது வருடங்கள் விற்காமல் இருக்கும் நிலைக்கு தள்ளப்படலாம்” என்று பொருள்.
உங்களுக்கு தோன்றக் கூடிய சில கேள்விகள்:
1. ”எனக்கு தெரிந்து பலர் பங்கு சந்தையில் பணம் பார்த்திருக்கிறார்களே, நானே போன வருடம் பத்தாயிரத்தை பதினைந்தாக மாற்றினேனே, நீ ஏன் நேரடியாக பங்கு (stock)அல்லது துறைசார் பரஸ்பர நிதி வாங்க வேண்டாம் என்கிறாய்?”
2. இதில் ஏன் ULIP, NFO பற்றி எழுதவில்லை?
3. பரஸ்பர நிதியில் 10 ரூபாய்க்கு வரும் புது நிதி (New Fund Offer அல்லது NFO) குறைந்ததுதானே? அதைவிட்டு ஏன் அதிக விலை இருக்கும் பழைய நிதிதான் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய்?
4. பங்கு வாங்கினால் சில சமயம் டிவிடென்ட் தருகிறார்கள். பரஸ்பர நிதியிலும் சில சமயம் டிவிடெண்ட் தருகிறார்கள். இரண்டுமே நமக்கு வருவாய்தானே?
5. பரஸ்பர நிதியில் growth மற்றும் dividend என்று இரண்டு வித choice இருக்கின்றன. எந்த சமயத்தில் எது வாங்க வேண்டும்?
6. Reliance, SBI, DBS, Franklin Templeton, Birla Sun life என்று பல நிறுவனங்கள் பரஸ்பர நிதியை விற்கின்றன. எந்த நிறுவனத்தின் பரஸ்பர நிதிகள் நல்லவை?
7. ஒவ்வொரு நிறுவனத்திலும் 30 அல்லது 40 பரஸ்பர நிதிகள் இருக்கின்றன. எதை வாங்க வேண்டும்?
வேறு இருப்பின் பின்னூட்டத்தில் கேட்கலாம். தெரிந்தவரை பதில் எழுதுகிறேன். பதில்கள் அடுத்த பதிவில்.
No comments:
Post a Comment