Tuesday, March 25, 2008

பரஸ்பர நிதி - கேள்வி பதில் 2 (Mutual Funds. Q&A part 2)

4. பங்கு வாங்கினால் சில சமயம் டிவிடென்ட் தருகிறார்கள். பரஸ்பர நிதியிலும் சில சமயம் டிவிடெண்ட் தருகிறார்கள். இரண்டுமே நமக்கு வருவாய்தானே?

5. பரஸ்பர நிதியில் growth மற்றும் dividend என்று இரண்டு வித choice இருக்கின்றன. எந்த சமயத்தில் எது வாங்க வேண்டும்?


இரண்டுக்கும் சேர்த்து சற்று விரிவான பதில்.

பங்கு வைத்திருப்பவர்களுக்கு டிவிடெண்ட் தருவதற்கும், பரஸ்பர நிதியில் டிவிடெண்ட தருவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

இதற்கு முன்பே, பங்கு வாங்குவது தேவையற்றது, நல்லதல்ல என்ற எனது கருத்தை, காரணங்களுடன் கூறி இருக்கிறேன். எப்படியோ, உங்களிடம் Infosys போன்ற நிறுவனங்களின் பங்கு (share or equity) இருந்தால், சில சமயங்களில் அந்த நிறுவனம் டிவிடெண்ட் என்று கொஞ்சம் பணத்தை அனுப்பும். அது லாபத்தில் கொஞ்சம் பகுதியை உங்களுடன் பகிர்வது போல. இதனால் பங்கின் விலை ஏறவோ இறங்கவோ செய்யாது.

ஆனால், பரஸ்பர நிதியில் டிவிடெண்ட் என்பது, உங்கள் பணத்தையே உங்களுக்கு திருப்பித் தருவதாகும். உதாரணமாக, நீங்கள் பரஸ்பர நிதிக்கு பதில் தங்கத்தில் முதலீடு செய்வதாக கற்பனை செய்து கொள்ளவும். பத்து வருடங்களுக்கு முன் 1998ல் 10,000 ரூபாய்க்கு தங்கம் வாங்கி இருக்கிறீர்கள். இப்போது அந்த தங்கத்தின் மதிப்பு 20,000 ரூபாய். இதில் 5000 ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை விற்றுவிட்டால், உங்களிடம் கையில் 5000 ரூபாய் பணமாகவும் (cash) மீதி 15000 ரூபாய் தங்கமாகவும் இருக்கும்.

அதைப்போலவே, பரஸ்பர நிதியில் உங்கள் முதலீடு 10000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவர்கள் உங்களுக்கு 2000 ரூபாய் டிவிடெண்ட் கொடுத்தால், உங்கள் பரஸ்பர நிதியின் மதிப்பு 8000 ரூபாயாகக் குறைந்துவிடும். இப்பொழுது 8000 ரூபாய்க்கு பரஸ்பர நிதியும், 2000 ரூபாய் பணமாகவும் (cash) இருக்கும்.

பலரும் இதை உடனடியாக உணர்வது இல்லை. டிவிடெண்ட் கொடுத்த பின், பரஸ்பர நிதியின் மதிப்பு குறையும். உதாரணமாக, NAV (net asset value) என்பது டிவிடெண்டுக்கு முன் 15 ரூபாய் என்று இருந்தால், 2 ரூபாய் டிவிடெண்ட் கொடுத்த பிறகு 13 ரூபாய் ஆகிவிடும். உங்களிடம் இருக்கும் யூனிட்டின் எண்ணிக்கை மாறாது. நீங்கள் அதை மட்டும் பார்த்தால், ”டிவிடெண்ட் வந்து விட்டது, அதே அளவு யூனிட்டும் இருக்கு” என்று மகிழ்வார்கள்.

உங்கள் பணத்தில் ஒரு பகுதியை, உங்களுக்கு திருப்பி கொடுப்பதில் என்ன பயன்? வேண்டும் என்றால் நீங்களே உங்கள் முதலீட்டில் ஒரு பகுதியை விற்று காசாக்கலாமே? எதற்கு இந்த டிவிடெண்ட்?

இது சரியான கேள்வி. பெரும்பாலானவர்களுக்கு, பெரும்பாலான் சமயங்களில் இந்த டிவிடெண்டால் எந்தப் பயனும் இல்லை. அதனால்தான், நீங்கள் வாங்கும் பரஸ்பர நிதி growth option எனப்படும் டிவிடெண்ட் இல்லாத முறையிலேயே வாங்கவேண்டும்.

எந்த சமயத்தில் யாருக்கு இந்த பரஸ்பர நிதி டிவிடெண்டினால் பயன்?
பங்கின் மூலம் வந்தாலும், பரஸ்பர நிதிமூலம் வந்தாலும் உங்களுக்கு வரும் டிவிடெண்ட் சட்டப்படி வரிவிலக்கு பெற்றது.

நீங்கள் பரஸ்பர நிதியை வாங்கி ஒரு வருடத்திற்குள் விற்றால், அதில் வரும் லாபத்திற்கு 10 % வரி கட்ட வேண்டும். ஒரு வருடத்திற்கு மேல் விற்றால், முழு வரி விலக்கு. ஆனால், நீங்கள் நிதி வாங்கி 6 மாதத்தில் டிவிடென்ட் வந்தால் அதற்கு வரி விலக்கு. இந்த நிலையில் டிவிடெண்ட் option எடுத்து இருப்பவர் வரி கட்ட மாட்டார். அதே சமயம், 6 மாதத்தில் பரஸ்பர நிதியை விற்பவர் வரி கட்ட வேண்டும்.

பலரும் வரி கட்டாததால், நடைமுறையில் இந்த வித்தியாசம் கூட இருப்பதில்லை.

எனது கருத்துப்படி பரஸ்பர நிதியை மூன்று வருடங்களுக்கு மேல் வைத்திருக்கும் எண்ணம் இருந்தால், முழு வரிவிலக்கை எப்படியும் அனுபவிப்பீர்கள். அதனால் டிவிடெண்டால் பயனில்லை.

இன்னமும் சில நுணுக்கமான subtle விவரங்கள் உண்டு. ஆனால் அவை அவ்வளவு முக்கியம் இல்லை. கடைசியில் உங்கள் வருவாயை அவை அதிகம் பாதிக்காது. அதனால் அவற்றை சொல்லி உங்களை குழப்பாமல் விட்டு விடுகிறேன் :-)

10 comments:

Anonymous said...

Dear sir,
thanks a lot for the valuble information. I was looking for something like that now 1ly i came to know abt ur blog. I had invested about 8 mf in various amc.Although I am a long term invester this new NAVs are bothering me. How long do i have to wait?? What do you think abt owing lot'f funds.(I fount it's easy to moniter because of value rearch my portfolio)..

S. Ramanathan said...

வருகைக்கு நன்றி மகேஷ். நீங்கள் உங்கள் கேள்விகளை valueresearchonline லேயே கேட்கலாம். அதற்கு காரணம் 1. அதை நடத்தும் தீரேந்திர குமாருக்கு என்னை விட இவ்விவரங்கள் அதிகம் தெரியும், அவரும் “உங்கள் நன்மையை” முதல் நிறுத்தி சொல்வார் என்று எனக்கு நம்பிக்கை உண்டு. 2. எனது மின்னஞ்சலை இங்கு வெளியிட விரும்பவில்லை 3. உங்கள் முதலீடு விவ்ரங்களை இங்கு பதிவில் தெரிவிப்பது நல்லதல்ல.

உங்களுக்கு இப்பொழுது முதலீடு செய்த பணம் தேவைஇல்லை என்றால், NAV பற்றி கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு எப்பொழுது தேவையோ அதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன் கொஞ்சம் கொஞ்சமாக விற்பதுதான் நல்லது.

நீங்கள் கேட்காத கேள்விக்கு பதில் ஒன்று :-). ஒன்று அல்லது இரண்டு பரஸ்பர நிதி போதும் என்று நான் சொல்ல என்ன காரணம்? பல online தளங்களில் இவற்றை சுலபமாக பார்க்க வழி உண்டு. உங்களுக்கு 15 பரஸ்பர நிதி இருந்தாலும், அனைத்தையும் ஒரே இடத்தில் சுலபமாக பார்க்க முடியும். ஆனால்,

1. பல பரஸ்பர நிதிகள் வாங்குவதால், பல வருடங்கள் கழித்துப் பார்க்கும் பொழுது பெரிய லாபம் இல்லை.

2. ஒன்றுடன் ஒன்றை ஒரு வாரத்திற்கு நான்கு முறை ஒப்பிட்டுப் பார்த்து நேரத்தை வீண் செய்வோம். இது மனித இயல்பு. சில சமயம் “இதைவிட அது அதிகம் வளர்கிறதே” என்று ஒரு நிதியை விற்று இன்னொரு நிதியை வாங்குவோம்.

3. நீங்கள் கூறியது போல, இவற்றை சுலபமாக monitor செய்ய முடியும். சுலபமாக , ஒரு க்ளிக்கில் வாங்கவும், ஒரு க்ளிக்கில் விற்கவும் முடியும். எனக்கு என்னவோ இது ஒரு குறை என்றுதான் தோன்றுகிறது.

பங்கு வாங்குவது என்பது வீடு/நிலம் வாங்குவது போன்ற முதலீடு. வீடையோ, நிலத்தையோ உடனடியாக வாங்க விற்க முடியாது. அலைந்தவர்களுக்கு அதன் அருமை தெரியும். நீங்கள் சைதாப்பேட்டையில் ஒரு வீடு வாங்கி இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதன் விலை ஒரு வருடத்தில் 20 % ஏறி இருக்கிறது. உங்கள் நண்பர், ”வேளச்சேரியில் வீட்டு விலை போன வருடத்தில் 30% ஏறியது” என்று சொன்னால்..... “வேளச்சேரியில் வாங்கி இருக்கலாம்” என்று நினைத்துக் கொள்வோம். ஆனால், உடனே சைதாப்பேட்டை வீட்டை விற்று, அன்றைக்கே வேளச்சேரியில் வீடு வாங்க மாட்டோம். அவ்வாறு செய்ய முடியாது. செய்ய முடிந்தாலும், அப்படி செய்வது தவறு. சில காலம் பொறுத்துப் பார்த்து, நன்கு யோசித்து, அதன் பின்னர் வேண்டுமானால் சைதாப் பேட்டை வீட்டை விற்று, வேறு இடத்தில் வீடு வாங்கலாம். தினமும் வீட்டை விற்று வாங்கினால், சில சமயம் லாபம் வரும், சில சமயம் நட்டம் வரும். இவ்வாறு அடிக்கடி வாங்கி விற்பதில் எப்போதும் லாபம் பெறுவது புரோக்கர்கள் மட்டுமே.

ஆனால், பரஸ்பர நிதியில் சுலபமாக விற்க வாங்க முடிவதால், பலரும் அடிக்கடி விற்று வாங்குகிறார்கள். இதனால் லாபம் பெறுவது நிறுவனங்களும் ஏஜண்டுகளும் மட்டுமே.

Anbu(parasparfund@gmail.com) said...

அன்பு ராமநாதன்,

அருமையான விளக்கங்களுடன், தேவையான விசயங்களைத் தொடர்ந்து எழுதி வருகின்றீர்கள். மிக்க நன்றி. இதுவரை எழுதிய பதிவுகளை மொத்தமாக ஒரே கோப்பாக பிரிண்டி நேற்றுதான் வாசித்தேன்.

இன்றைய கேள்விபதிலும் மிக பயனுள்ளது. உங்கள் பதிவில் சக முதலீட்டாளாரக, பயனுள்ள பல அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மிக பயனுள்ளது. இதுவரை டிவிடெண்ட் ஆப்சனில் என்.ஏ.வி குறைவாகவும் குரோத்தில் அதிகமாகவும்‍‍ வெளிப்படையாகத் தெரியுமென்றாலும், அதன் நுட்பத்தை பலரும் அறியச்செய்திருக்கின்றீர், நன்றி.

இதன் தொடர்ச்சியாக, டிவிடெண்ட் மறுமுதலீடு என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கும் குரோத் ஆப்சனுக்கு என்ன வித்தியாசம், என்றும் நேரம் வாய்க்கும்போது எழுதுங்கள்.

மீண்டும் நன்றி.

S. Ramanathan said...

நன்றி அன்பு அவர்களே. தற்போது உள்ள சட்டங்கள் படி டிவிடெண்ட் மறு முதலீட்டிற்கும் குரோத்திற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. டிவிடெண்ட் மறு முதலீட்டில் வரி சற்று அதிகமாக வாய்ப்பு இருக்கும் என நினைக்கிறேன். கொஞ்சம் யோசித்து பின்னர் எழுதுகிறேன். ஆனால், கண்டிப்பாக குரோத் என்பது டிவிடெண்ட் மறு முதலீட்டை விட மோசமில்லை என நினைக்கிறேன். டிவிடெண்ட் பணமாக வாங்குவது சில சமயங்களில் குரோத்தை விட நல்லதாக அமைய கொஞ்சம் வாய்ப்பு உண்டு. இதை எல்லாம், எடுத்துக்காட்டுகளுடன் பதிவாக போட முயல்கிறேன்.

Anonymous said...

Dear Sir,
Thanks for your reply. I want to know one more thing. How much will the brokers will taken as commission for trading a NFO and old mutual fund.And as for as new NFO concered entry load is not there.So one more reason for going to the NFO is advisable than the the old mutual funs right?? PLease give me some light regarding this. Once again thank you very much for educating us.

Anbu(parasparfund@gmail.com) said...

Dear Mahesh,

Entry load waived for new and ALSO existing funds, if you submit your application directly to AMC or buy online from AMC sites (these days many companies offer this with link with Netbanking - but still you have option to fill ARN no. if you wish:)

Also, if you have existing SIP invested through agent, can also be changed to direct now to avoid paying entry load.

So No Entry Load applicable for both NFO and existing fund with good track record, so you no need to choose NFO just bcos of no entry load.

Anbu(parasparfund@gmail.com) said...

Dear Mahesh,

Sorry missed out your other query on the commission.
Though we thought 'No Entry Fee' during NFO (even before SEBI's new rule start 01/jan/08), agents used to get commission from AMC in the range of 2 to 4+ % , this is again investors money but getting it from launch fee etc.

So, for the existing Equity fund is around 2% and for NFO around 4% - here some part during entry and some portion as trail.

So, with this SEBI's move - those who invest directly no need to pay entry load.

(Sorry, for my reply again English and also though Ram will explain in detail later, my few cents worth response:)

Anonymous said...

Dear Anbu,
Thanks for your reply. It's really intresting to know abt all these facts. In fact, last month (FEB) I took several mutual funds (about 6) from my friend, who is a broker. But he din't inform me abt this SEBI's new rule. (May be because of commission).So thanks for creating new awareness. I am looking for Mr.Ram's comment also abt this...Sorry for putting this comment in english as I don't have software to type in tamil.

S. Ramanathan said...

நன்றி மகேஷ் & அன்பு. நான் மறுபடி விவரங்களை படித்துப்பார்த்து எழுத வேண்டும். ஓரிரு நாட்கள் பொறுத்துக்கொள்ளவும். ஞாயிறுக்குள் எனக்கு விளங்கியதை எழுதுகிறேன்.

S. Ramanathan said...

முதலில் NFO பற்றி. அதில் Entry Load இல்லை என்றாலும், Launch Fee என்று ஒன்று உண்டு. அதன் மூலம் ஏஜண்டுகள் கமிஷன் அதிகம் பெறுவதால்தான் நம்மை NFO வாங்க சொல்வார்கள். நீங்கள் 100 ரூபாய்க்கு NFOக்கு கொடுத்தால், 97 ரூபாய்க்குதான் யூனிட் வரும். அதாவது 10 ரூபாய் யூனிட் 9.7 கிடைக்கும்.

Entry load என்பது நேரடியாக வாங்கினால் கிடையாது. ஏஜெண்ட் மூலம் வாங்கினால் போகும். அது அதிகபட்சமாக (Maximum) 2.5% அல்லது 2.25% என நினைக்கிறேன்.

நீங்கள் ICICIdirect போன்ற இடங்களில் வாங்கினாலும் அது போய்விடும். நேரடியாக என்றால், உண்மையிலேயே நேரடியாக நிறுவனத்தில் வாங்கினால்தான் Entry Load இல்லாமல், போட்ட அத்தனை பணத்திற்கும் யூனிட் கிடைக்கும்.

இது எல்லாவற்றையும் விட, என்னைப் பொறுத்தவரை, பழைய நிதி பற்றி நமக்கு தெரியும் (Track Record இருக்கிறது). புது நிதி பற்றி யாருக்குமே ஒன்றும் தெரியாது. புது நிதியை நடத்தும் மேனஜருக்கு கூட, என்ன பங்கு வாங்குவோம் என்பது தோராயமாகத்தான் தெரியும். உங்கள் பணம் எல்லாம் சேர்ந்தபின் மார்கெட் நிலவரத்தைப் பொறுத்து முடிவு செய்வார்.

கடந்த சிலநாட்களில் கவனித்தீர்களானால், மார்கெட் கரகாட்டம் போடுவதை பார்த்திருப்பீர்கள். ஒரு வாரத்திலேயே இந்த ஆட்டம் என்றால், NFO ஆரம்பித்து, உங்கள் பணம் போட்டு அவர்கள் முதலீடு செய்ய 1 மாதமாவது ஆகும். அதற்குள் என்ன எல்லாம் நடந்திருக்க வாய்ப்பு.

இங்கு இன்னொன்றையும் கவனிக்கவும். நீங்கள் 10,000 ரூபாய் இன்று NFOக்கு கொடுத்தால், அதை வைத்து ஒரு மாதத்தில் பங்கு வாங்கி உங்களுக்கு யூனிட் கொடுப்பார்கள். அதுவரை, வட்டி கிடையாது. அது பெரிய இழப்பில்லை என்றாலும், நாம் தெரிந்து கொள்வதில் தவறில்லை.

டிவிடெண்ட் , குரோத், டிவிடெண்ட் ரீ இன்வஸ்மெண்ட் பற்றி தனிப்பதிவு போடுகிறேன்.