Thursday, March 20, 2008

நிதி திட்டமிடுதல். 2. பாதுகாப்பு (Financial Planning. Risks)

நாம் வருவாய் பற்றி திட்டமிடும்பொழுது சில விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். எந்த வகை முதலீடுகளில் எந்த அளவு வருமானம் (returns) எதிர்பார்க்கலாம், எவ்வளவு பாதுகாப்பானது (risk vs safe), எவ்வளவு முதலீடு வேண்டும், எவ்வளவு விரைவில் பணம் எடுக்கலாம் என்பது பற்றி முதலில் பார்ப்போம்.

எவ்வளவு வருமானம் என்பது நீங்கள் நூறு ரூபாய் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் எவ்வளவு திரும்ப வரும் என்பதாகும். நூற்றி ஐந்து என்றால் 5 சதவிகித வருமானம். 90 ரூபாய் என்றால் 10 சதவிகித இழப்பு.

எவ்வளவு பாதுகாப்பு என்பது, நீங்கள் போட்ட பணம் திரும்ப வருமா, கொஞ்சம் குறைந்து வருமா (இழப்பு) என்பதைக் குறிக்கிறது.

எவ்வளவு விரைவில் என்று நான் இங்கு சொல்வது, உங்களுக்கு இன்று பணம் வேண்டும் என்று தோன்றினால் எவ்வளவு நாளில் உங்கள் முதலீட்டை பணமாக்கலாம் என்பது. உதாரணமாக, சேமிப்பு வங்கியில் இருந்து ATM மூலம் ஐந்து நிமிட நேரத்திற்குள் பணம் எடுக்கலாம். வைப்பு நிதியில் இருந்தால் ஒரு சில மணிகளுக்குள் எடுக்கலாம். உங்கள் முதலீடு தங்கம் என்றால் அதைப் பணமாக்க ஓரிரு நாட்கள் ஆகலாம். முதலீடு ஒரு வீடு என்றால் அதை உடனே பணமாக்க முடியாது. அதை விற்று பணமாக்க ஓரிரு மாதங்கள் ஆகலாம். இதைத்தான் நான் இந்த இடத்தில் “எவ்வளவு விரைவில்” என்று சொல்கிறேன்.

எவ்வளவு முதலீடு வேண்டும் என்பதற்கு உதாரணம்: சேமிப்பு வங்கி கணக்கு தொடங்க ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாய் போதும். வைப்பு நிதிக்கு குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் வேண்டும் (என்று நினைக்கிறேன்). தங்கத்தில் முதலீடு செய்ய குறைந்த பட்சம் அரை பவுன் காசு வாங்க ரூபாய் ஐயாயிரம் தேவைப்படும். வீடு அல்லது நிலத்தில் முதலீடு செய்ய சில லட்சங்கள் தேவை. பங்கு சந்தையில் முதலீடு செய்ய குறைந்த பட்சம் ஐநூறு ரூபாய் தேவை.

விவரங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

பாதுகாப்பு:
  1. நாட்டு உடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் நாம் போடும் பணம் எல்லாம் பாதுகாப்பானது. அது சேமிப்பு (savings) கணக்கானாலும் சரி, வைப்பு நிதி (fixed deposit) ஆனாலும் சரி
    • இதில் சட்டப்படி, ஒரு லட்சம் வரைதான் பாதுகாப்பு. ஆனாலும், State Bank of India போன்ற வங்கிகள் மூழ்காமல் அரசியல் காரணங்களுக்காக பாதுகாக்கப்படும். இந்த வங்கி மூழ்கினால் நாட்டில் பல கோடி பேர் பாதிக்கப்படுவார்கள். அரசு ஆட்சியில் இருப்பவர்கள் இந்த ஜென்மத்திற்கு ஓட்டு வாங்க முடியாது. அந்த பயத்தில் எப்படியாவது இது திவாலாகாமல் காப்பார்கள்

  2. ICICI போன்ற பெரிய தனியார் வங்கிகளும் ஓரளவு நல்ல பாதுகாப்பு உடையவை. நீங்கள் சேமிப்பு மற்றும் வைப்பு நிதிகளை இவற்றில் போடலாம்

  3. கூட்டுறவு வங்கிகள் மற்று சிறிய தனியார் வங்கிகள் கொஞ்சம் பாதுகாப்பு குறைந்தவை. சமயத்தில் திவாலாகலாம். வேறு வழி இல்லை, உங்கள் ஊரில் இது ஒன்றுதான் உண்டு என்றால் இவற்றில் பணம் போடலாம். மற்றபடி பெரிய வங்கிகளை விட ஓரிரு சதவீதம் அதிகம் வட்டி தந்தால் பணம் போட வேண்டாம்

  4. தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்கள். இவற்றை (ஓரளவுக்கு மேல்) வீட்டில் வைத்திருந்தால் திருட்டினால் இழக்க வாய்ப்பு இருக்கிறது. இவற்றின் விலையும் ஏறி இறங்கும். அதனால் நாம் இன்று 1 லட்சத்திற்கு தங்கம் வாங்கினால் அதை ஒரு வருடத்திற்கு பிறகு விற்றால் நிச்சயமாக ஒரு லட்சத்திற்கு மேல் விலை போகும் என்று சொல்ல முடியாது. ஆனால் பெரும்பாலும் விலை கூடித்தான் இருக்கும். அதனால் இதை 'கொஞ்சம் பாதுகாப்பு குறைந்த' (some risk) முதலீடு என்று சொல்லலாம் அதாவது முதலுக்கு மோசம் வர கொஞ்சம் வாய்ப்பு உண்டு.
    • தங்கத்தை பங்கு சந்தையில் ஒரு விதமான குறிப்பிட்ட பரஸ்பர நிதியில் வாங்கலாம். அதில் திருடு போக வாய்ப்பு இல்லை. மற்ற படி தங்கத்தின் விலை ஏறினால் இதுவும் அதே அளவு ஏறும். தங்கம் விலை இறங்கினால் இதுவும் அதே அளவு இறங்கும். வெள்ளிக்கு இது போன்ற ஏற்பாடு இன்னமும் இல்லை

  5. வீடு, நிலம். இவையும் தங்கம் வெள்ளி போன்றதே. பெரும்பாலும் விலை ஏறும். ஆனால் நடுநடுவே விலை இறங்கவும் வாய்ப்பு உண்டு. இது தங்கம் வெள்ளியை விட பாதுகாப்பு குறைந்தது.
    • இதற்கும் பங்கு சந்தையில் பரஸ்பர நிதி வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் இப்பொழுது (2008 மார்ச்சில்) இல்லை

  6. பங்கு சந்தை. இவற்றில் நேரடியாக பங்கு எனப்படும் stock வாங்கலாம். இது மிகவும் பாதுகாப்பு அற்றது. நீங்கள் ஆயிரம் ரூபாய்க்கு பங்கு வாங்கினால் அது ஒரு மாதத்தில் இரண்டாயிரமாகவும் ஆகலாம். ஆயிரமாகவே இருக்கவும் செய்யலாம். நூறு ரூபாயாகவும் மாறலாம். இதை நேரடியாக நாம் வாங்குவது தவறு (தேவையற்றது) என்பது என் கருத்து.

  7. பங்கு சந்தையில் பரஸ்பர நிதி என்பதை வாங்கலாம். இதை பலவகையாகப் பிரித்து, நம்மை குழப்பி, குழம்பிய குட்டையில் (மூளையில்?) மீன்பிடிக்கவே (பணம் எடுக்கவே)பல நிறுவனங்கள் காத்திருக்கின்றன. நாம் உண்மையில் பார்க்க வேண்டியது ஒரு சில வகைகளை மட்டுமே.
    • பங்கு (Share) களில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதி. இவற்றை `Equity funds' என்று சொல்வார்கள். இது நேரடியாக பங்கு வாங்குவதை விட பாதுகாப்பானது. ஆனால் தங்கம் வெள்ளி அல்லது வீடு வாங்குவதை விட பாதுகாப்பு குறைந்தது.

    • சில பரஸ்பர நிதிகள், வங்கிகளில் வைப்பு நிதியில் உங்கள் பணத்தை போடும். இவற்றை debt funds என்று சொல்வார்கள். இவை ஏறக்குறைய உங்கள் வங்கியில் வைப்பு நிதி போடுவதற்கு சமம். அதைவிட கொஞ்சம் குறைவாக வருமானம் வரும். முதலீடு பாதுகாப்பாக இருக்கும். ஆயிரம் ரூபாய் போட்டால் அது ஐநூறாக குறையாது. ஒரே மாதத்தில் இரண்டாயிரமாகவும் ஏறாது. ஒரு வருடத்தில் ஏறக்குறைய 8 சதவிகிதம் பணம் கிடைக்கும். ஆனாலும் வங்கி வைப்பு நிதியில் பணம் போடாமல், இதில் பணம் போடுவது சில சமயங்களில் பயன் அளிக்கும். விவரங்கள் பிறகு

    • தங்கத்தை நாம் வாங்குவதற்கு பதில், நம் சார்பாக வாங்கும் பரஸ்பர நிதி. இவற்றை சற்று முன் பார்த்தோம். இவை தங்கத்தைப் போலவே கொஞ்சம் பாதுகாப்பு குறைந்த முதலீடு

    • கொஞ்சம் பங்குகளிலும் (share) கொஞ்சம் வங்கி வைப்பு நிதியிலும்(debt) பணம் போடும் பரஸ்பர நிதிகள் balanced funds எனப்படும். இவை ஓரளவு பாதுகாப்பு உடையவை

    • இதைத் தவிர, ‘மின்சாரக் கம்பெனிகளில் மட்டும்' முதலீடு செய்யும் பரஸ்பர நிதி, ‘infra structure'இல் மட்டும் முதலீடு செய்யும் பரஸ்பர நிதி என்று ஒவ்வொரு வகை வியாபாரத்திற்கும் தனி வகை பரஸ்பர நிதிகள் உள்ளன. இவை sector funds அல்லது துறை சார்ந்த பரஸ்பர நிதி எனப்படும். இவை ஏறக்குறைய பங்குகள் வாங்குவது போல பாதுகாப்பு குறைந்தவை. நமக்கு தேவை இல்லாதவை என்பது என் கருத்து.




நாம் அனைவரும் நமது தேவைகள் மற்றும் வருமானத்திற்கு ஏற்ப கீழ்க்கண முதலீடுகளில் பணம் போட வேண்டும் என்பது என் கருத்து.

  1. அன்றாட (அந்த அந்த மாத) செலவுக்குப் பணம். வங்கி சேமிப்பு கணக்கில். இது பாதுகாப்பாக, உடனே (விரைவில்) எடுக்கக் கூடிய பணமாக இருக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப 1000 அல்லது 5000 அல்லது 10000 என்று வைத்து கொள்ளலாம். அதிகம் பணம் புழங்க வேண்டி இருந்தால் (அடிக்கடி செக் எழுத வேண்டி இருந்தால்) 50000 வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு வங்கியிலோ வேறு இடத்திலோ கடன் இருந்தாலும், இது வேண்டும்.

  2. ஓரிரு நாட்களில் தேவைப்படும் பணம். திடீரென்று உடல் நலம் குறைகிறது. மருத்துவ மனையில் ஆபரேசஷன் செய்ய வேண்டும் என்கிறார்கள். இதற்கு விரைவில் (ஓரிரு நாட்களில்) பணம் எடுக்க வேண்டும். முடிந்தால் வைப்பு நிதியிலோ அல்லது debt funds எனப்படும் “வைப்பு நிதியில் வைக்கும் பரஸ்பர நிதியிலோ” ஓரிரு லட்சங்களை வைத்திருக்க வேண்டும். இப்போதைக்கு அவ்வளவு பணம் இல்லை என்றால் என்ன செய்வது? இப்போது வீட்டில் யாருக்காவது பெரிய உடல் நலக்குறைவு வந்தால், அக்கம் பக்கம் கடன் வாங்கி சமாளிக்க வேண்டியது தான். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து, ஒரு லட்சமாவது வைப்பு நிதியில் (உடல் நலத்திற்காக) போடுவது பணத்தை பொறுத்த வரை உங்கள் முதல் வேலையாக இருக்க வேண்டும். நீங்கள் அரசாங்க வேலை பார்த்தால், அதில் போடும் PF பி.எஃப். என்பதுவும் இந்தக் கணக்கில் வரும். இதுவும் உங்களுக்கு கடன் இருந்தாலும் வேண்டும் என்பது என் கருத்து.

  3. முதல் இரண்டும் பார்த்துக்கொண்ட பிறகு, உங்களுக்கு கடன் இருந்தால், அதைமுதலில் அடைக்க வேண்டும். வீட்டுக் கடன் மட்டும் விதி விலக்கு (அதாவது அதை அடைக்க வேண்டாம் என்று கூறவில்லை :-), வீட்டுக் கடன் இருந்தாலும் நீங்கள் மற்ற முதலீடுகள் செய்யலாம் என்று பொருள்)

  4. உங்களுக்கு (வீட்டுக் கடன் தவிர வேறு )கடன் இல்லை என்றால் மட்டுமே:

    • தங்கம் வெள்ளியில் முதலீடு. தங்கம் மற்றும் வெள்ளியில் கொஞ்சம் முதலீடு செய்யலாம். நகையாக செய்ய வேண்டாம். தங்கக் காசாக இருக்கலாம். தங்கத்தில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியாக இருக்கலாம். உங்களிடம் இருக்கும் மொத்த சொத்தில் ஐந்து முதல் பத்து சதவீதம் இப்படி சேமிக்க வேண்டும். தங்க நகைகள் இருந்தால், அதில் பாதி மதிப்பைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    • நிலம் மற்றும் வீடு. உங்கள் சொத்தில் 30 முதல் 60 சத்விகிதம் வரை வீடாக, நிலமாக முதலீடு செய்யலாம். நீங்கள் குடி இருக்கும் வீடு இதில் அடங்கும்

    • பங்கு சந்தை. பங்குகளில் (share) முதலீடு செய்யும் பரஸ்பர நிதி உங்கள் சொத்தில் 30 முதல் 60 பங்கு வரை இருக்கலாம். உங்களுக்கு ரிடையர் ஆகும் வயது வந்தால், இது குறைவாக (30 சதவிகிதமாக) இருக்க வேண்டும். குறைந்த வயதில், 60 சதவிகிதம் கூட இருக்கலாம்.



பாதுகாப்பு பற்றி மட்டும் இங்கு பார்த்தோம். மற்ற விவரங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

13 comments:

மங்களூர் சிவா said...

//
பங்கு சந்தை. இவற்றில் நேரடியாக பங்கு எனப்படும் stock வாங்கலாம். இது மிகவும் பாதுகாப்பு அற்றது. நீங்கள் ஆயிரம் ரூபாய்க்கு பங்கு வாங்கினால் அது ஒரு மாதத்தில் இரண்டாயிரமாகவும் ஆகலாம். ஆயிரமாகவே இருக்கவும் செய்யலாம். நூறு ரூபாயாகவும் மாறலாம். இதை நேரடியாக நாம் வாங்குவது தவறு (தேவையற்றது) என்பது என் கருத்து.
//

//
பரஸ்பரநிதியில்
முதலீடு பாதுகாப்பாக இருக்கும்.
//

ஆயிரம் ரூபாய் போட்டால் அது ஐநூறாக குறையாது. ஒரே மாதத்தில் இரண்டாயிரமாகவும் ஏறாது.
//


மிக மிக தவறான கருத்து

http://mangaloresiva.blogspot.com/

S. Ramanathan said...

வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் நன்றி மங்களூர் சிவா.

என் கருத்தை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன் ( ”I stand by my opinion" என்பதன் சரியான தமிழாக்கம் என்ன?) நீங்கள் வேகமாகப் படித்து விட்டீர்கள் என நினைக்கிறேன்.

Debt Funds எனப்படும் வைப்பு நிதி- பரஸ்பர நிதிகளைப்பற்றி நான் எழுதியவை சரியே. இவை பல வங்கிகளிலும், நிறுவனங்களிலும் வைப்பு நிதி (fixed deposit)இல் பணத்தை முதலீடு செய்யும்.இதில் பணத்தை அவ்வளவு சுலபமாக இழக்க முடியாது. பணமும் ஜிவ்வென்று ஏறாது. அப்போது வைப்பு நிதிக்கு எவ்வளவு வருமானம் வருமோ அவ்வளவுதான் இதற்கும் கிடைக்கும்.

இவற்றில் பணம் போடுவது பெரும்பாலான மக்களுக்கு தேவை இல்லை. வாங்கினாலும் பெரிய தவறில்லை. சில சமயங்களில் சட்டப்படி வரி (அதை ஒழுங்காகக் கட்ட நினைத்தால்) குறைக்க இது உதவும்,அவ்வளவே.

பங்கு பாதுகாப்பு அற்றது என்பதிலும் நான் என் கருத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன். இங்கு சிலவற்றை எளிமையாக்குகிறேன். அதே சமயம் பொருள் கெடாமலும் , இதைப் படித்து முதலீடு செய்பவர்களுக்கு சரியான எதிர்பார்ப்பு கொடுக்கும்படியும் பார்த்துத்தான் சொல்கிறேன். விதிவிலக்குகள் எல்லா இடங்களிலும் உண்டு. அவற்றை விட்டுவிட்டால் நான் கூறுபவை சரியே. தவறு என்றால், உங்கள் பதிவுகளில் எவற்றைப் படிக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டவும். நன்றி.

மங்களூர் சிவா said...

@ராமநாதன்

//
பரஸ்பரநிதியில்
முதலீடு பாதுகாப்பாக இருக்கும்.

ஆயிரம் ரூபாய் போட்டால் அது ஐநூறாக குறையாது. ஒரே மாதத்தில் இரண்டாயிரமாகவும் ஏறாது.
/

/
பங்குசந்தையில் நேரடியாக முதலீடு செய்வதும் தேவையற்றது/

இது இரண்டும் மிக தவறான கருத்து என குறிப்பிட்டிருந்தேன்.

ஜனவரி 08 ல் இருந்து 25,மார்ச் 08 வரையிலான ம்யூச்சுவல் பண்ட் பெர்பார்மன்ஸ் பார்த்தாலே தெரியும்.

ஃபண்ட் தேர்வு செய்வது போல ஆராய்ந்து பங்கை தேர்வு செய்ய வேண்டும்.

S. Ramanathan said...

நன்றி மங்களூர் சிவா. நீங்கள் மீண்டும் ஒரு முறை பதிவை நிதானமாகப் படிக்க வேண்டும்.

முதல் கருத்து. பங்கு சந்தையில் நேரடியாக பங்கு வாங்குவது தேவையற்றது.

இது தவறு என்று கூறுகிறீர்கள். ஏன் என்று விளக்க வேண்டும்.

இரண்டாவது. நான் பதிவில் எந்த இடத்திலும் பொதுவாக “பரஸ்பர நிதியில் முதலீடு பாதுகாப்பாக இருக்கும்” என்று எழுதவில்லை. நீங்கள் ‘cut-paste' செய்திருப்பது ஒரு குறிப்பிட்ட பகுதி (sub-section)ல் உள்ள பரஸ்பர நிதியைப் பற்றி. இங்கே மீண்டும் முழுதாக cut-paste செய்து கொடுக்கிறேன்.


//சில பரஸ்பர நிதிகள், வங்கிகளில் வைப்பு நிதியில் உங்கள் பணத்தை போடும். இவற்றை debt funds என்று சொல்வார்கள். இவை ஏறக்குறைய உங்கள் வங்கியில் வைப்பு நிதி போடுவதற்கு சமம். அதைவிட கொஞ்சம் குறைவாக வருமானம் வரும். முதலீடு பாதுகாப்பாக இருக்கும். ஆயிரம் ரூபாய் போட்டால் அது ஐநூறாக குறையாது. ஒரே மாதத்தில் இரண்டாயிரமாகவும் ஏறாது. ஒரு வருடத்தில் ஏறக்குறைய 8 சதவிகிதம் பணம் கிடைக்கும். ஆனாலும் வங்கி வைப்பு நிதியில் பணம் போடாமல், இதில் பணம் போடுவது சில சமயங்களில் பயன் அளிக்கும். விவரங்கள் பிறகு
//

நீங்கள் கூறி இருப்பது ‘equity based mutual funds' எனப்படும், ‘பங்கை
வாங்கும் பரஸ்பர நிதி பற்றியது'.

Debt funds பற்றி www.valueresearchonline.com பதிவில் (அல்லது வேறு பதிவுகளில் கூகிள் துணை கொண்டு) பார்க்கவும். ஜனவரி 08 முதல் மார்ச் 08 வரை பார்த்தால், ஏறக்குறைய வங்கிகளில் கிடைக்கும் வட்டியின் அளவுதான் இதில் கிடைக்கும். நேரம் கிடைக்கும்பொழுது, இந்த வகை பரஸ்பர நிதிகளைப்பற்றி விவரமாக எழுதுகிறேன். பெரும்பாலானவர்களுக்கு இதனால் பெரிய பயன் இல்லை; இதை வாங்குவதால் பாதிப்பும் இல்லை என்பதால் இதை முதலில் விவரமாக எழுதவில்லை.

Unknown said...

நீங்கள் ஒரு அவசர நிதி கடன் கடன் தேவை?
* உங்கள் வங்கி கணக்கில் மிக வேகமாக மற்றும் உடனடி பரிமாற்ற
* கடனை திருப்பி செலுத்தும் நீங்கள் பணம் கிடைக்கும் எட்டு நாட்களுக்குப் பிறகு தொடங்குகிறது
வங்கி கணக்கு
2% * குறைந்த வட்டி விகிதம்
* நீண்ட கால கடனை திருப்பி செலுத்தும் (1-30 ஆண்டுகள்) நீளம்
* நெகிழ்வான கடன் விதிமுறைகளில் மற்றும் மாத கட்டணம்
*. அது எவ்வளவு நேரம் நிதியளிக்க வேண்டும்? கடன் விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு
நீங்கள் ஒரு பூர்வாங்க பதில் 24 மணி நேரத்திற்கும் குறைவாக எதிர்பார்க்க முடியும்
அவர்கள் தேவையான தகவல்களை பெற்ற பிறகு 72-96 மணி நிதி
நீங்கள் இருந்து.

அங்கீகரிக்கப்பட்ட இந்த நியாயமான மற்றும் உரிமம் நிறுவனம், தொடர்பு
எல்லோரும் நிதி உதவி கொடுக்க
மேலும் தகவல் மற்றும் கடன் விண்ணப்ப படிவம் க்கான

மின்னஞ்சல்: cashfirmarena@gmail.com


சிறந்த அன்புடன்
சர் ஜோயல் வில்லியம்ஸ்
பண கடன் FIRM நிறுவனம்
தலைமை நிர்வாக அதிகாரி
தொலைபேசி: +60183723787

Unknown said...

நீங்கள் ஒரு அவசர நிதி கடன் கடன் தேவையா?
* உங்கள் வங்கி கணக்கில் மிக வேகமாக மற்றும் உடனடி பரிமாற்ற
நீங்கள் பணம் கிடைக்கும் பின்னர் * கடனை திருப்பி செலுத்தும் எட்டு மாதங்கள் தொடங்குகிறது
வங்கி கணக்கு
2% * குறைந்த வட்டி விகிதம்
* நீண்ட கால கடனை திருப்பி செலுத்தும் (1-30 ஆண்டுகள்) நீளம்
* நெகிழ்வான கடன் விதிமுறைகளில் மற்றும் மாத கட்டணம்
*. அது எவ்வளவு நேரம் நிதியளிக்க வேண்டும்? கடன் விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு
நீங்கள் ஒரு பூர்வாங்க பதில் 24 மணி நேரத்திற்கும் குறைவாக எதிர்பார்க்க முடியும்
அவர்கள் தேவையான தகவல்களை பெற்ற பிறகு 72-96 மணி நிதி
உன்னிடமிருந்து.

இந்த அதிகார முறையான மற்றும் உரிமம் நிறுவனம், தொடர்பு
எல்லோரும் நிதி உதவி கொடுக்க
மேலும் தகவல் மற்றும் கடன் விண்ணப்ப படிவம் க்கான

மின்னஞ்சல்: cashfirmarena@gmail.com


சிறந்த அன்புடன்
சர் ஜோயல் வில்லியம்ஸ்
காசு FIRM லோன் நிறுவனத்தின்
தலைமை நிர்வாக அதிகாரி
தொலைபேசி: +60183723787
மின்னஞ்சல்: cashfirmarena@gmail.com
Webisite: cashfirmarena.wordpress.com

NORTION LOAN CONSULTANT said...

நல்ல நாள்

  நீங்கள் அவசர கடனுதவி தேவைப்படுகிறதா? நீங்கள் மாணவர் கடன், ஒப்பந்த கடன், ஒரு வியாபாரத்தை தொடங்க கடன் அல்லது வேறு எந்த வகை கடன் வாங்க வேண்டும். பின்னர் உங்கள் கடன் 30 நிமிடங்களில் நீங்கள் மாற்றிக் கொள்ளுவதற்கு இப்போது nortionloanconsultant@gmail.com ஐ தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி +17815611941
WhatsApp: +2347067093957
ஒரு நல்ல நாள்...

FRED LARRY LOAN FIRM said...

48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

நல்ல நாள்

நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:

1 நிறுவனத்தின் கடன்
2. வணிக கடன்
3. குடியிருப்பு கடன்
4. ஆட்டோ கடன்
5. கார் கடன்

நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.

Whatssap எண்: +2347061892843
ஸ்கைப்: fredlarry12

கையொப்பமிடப்பட்ட
மேலாளர்
திரு ஃப்ரெட் லாரி

FRED LARRY LOAN FIRM said...

48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

நல்ல நாள்

நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:

1 நிறுவனத்தின் கடன்
2. வணிக கடன்
3. குடியிருப்பு கடன்
4. ஆட்டோ கடன்
5. கார் கடன்

நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.

Whatssap எண்: +2347061892843
ஸ்கைப்: fredlarry12

கையொப்பமிடப்பட்ட
மேலாளர்
திரு ஃப்ரெட் லாரி

Loan Offer. said...

வணக்கம்,
உங்களுக்கு அவசர கடனுதவி வேண்டுமா? அல்லது நிதி உதவி தேவைப்பட்டால், உலகெங்கிலும் குறைந்தபட்ச வருடாந்திர வட்டி விகிதத்தில் 2% குறைவாக, உலகெங்கிலும் உள்ள மக்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கு உதவ 5,000 டாலர்களை 100,000,000 டாலர்களுக்கு கடன்களை வழங்குகிறோம். ஆர்வமுள்ளவர் மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்: (stefanjonesloanfirm@gmail.com)

கடன் வழங்க.

Raymond Doison said...

Are you an individual businessman or a business organisation that wishes to expand in business ??, we offer financial instrument such as BGs, SBLCs,MTNs, LCs, CDs and others on lease and sales at a rate of 4%+2% of the face value and reasonable conditionfrom a genuine provider. You are at liberty to engage our leased facilities into trade programs as well as in signatory project(s) such as Aviation, Agriculture, Petroleum, Telecommunication and any other project(s) etc.

Contact : Mr. Raymond Doison
Contact Email: crusaderbroker.bgassurance@gmail.com
skype:crusaderbroker.bgassurance
Whatsapp : +380 50 922 4887

With our financial/bank instrument you can establish line of credit with your bank and/or secure loan for your projects in which our bank instrument will serve collateral in your bank to fund your project.

We deliver with time and precision as set forth in the agreement. Our terms and Conditions are reasonable and we work directly with issuing bank lease providers, this instrument can be monetized on your behalf for upto 100% funding. Intermediaries/Consultants/Brokers are welcome to bring their clients and are 100% protected. In complete confidence, we will work together for the benefits of all parties involved.

All relevant business information will be provided upon request.

BROKERS ARE WELCOME & 100% PROTECTED!!!

If Interested kindly contact me via

Email:~ crusaderbroker.bgassurance@gmail.com

Skype ID:crusaderbroker.bgassurance

serious enquiry only.

Genuine Provider for BG/SBLC(Bank Guarantee/Standby Letter of Credit)
I am Direct Provider's Mandate of BG & SBLC Lease 100% protected.

Anonymous said...

Hello Everybody,
My name is Mrs Sharon Sim. I live in Singapore and i am a happy woman today? and i told my self that any lender that rescue my family from our poor situation, i will refer any person that is looking for loan to him, he gave me happiness to me and my family, i was in need of a loan of $250,000.00 to start my life all over as i am a single mother with 3 kids I met this honest and GOD fearing man loan lender that help me with a loan of $250,000.00 SG. Dollar, he is a GOD fearing man, if you are in need of loan and you will pay back the loan please contact him tell him that is Mrs Sharon, that refer you to him. contact Dr Purva Pius, call/whats-App Contact Number +918929509036 via email:(urgentloan22@gmail.com) Thank you.

WE OFFER ALL KIND OF LOANS - APPLY FOR AFFORDABLE LOANS said...

Good day Sir/Madam,

This message is to inform you that MIKE MORGAN LOAN FINANCIER offer all types of L0ANS @ 3% annual rate. Are you in need of financing of any type? Business, Mortgage, Personal etc. Any interested Applicants should get back to US VIA
EMAIL: muthooth.finance@gmail.com
Call or add us on what's App +91-7428831341